பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மார்வாய் நகரத்தில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் அரசு ஆதரவு படைகளுடன் சண்டையிட்டனர். அப்போது, அரசு ஆதரவு படைகளை திசை திருப்பும் வகையில் அங்குள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 300 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களை பணையக்கைதிகளாக சிறை பிடித்து வைத்துள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் சிலரும் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எத்தனை பேர் பணையக்கைதிகளாக பிடிபட்டுள்ளனர் என்பது குறித்தும் அவர்களின் அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.