ஒரு மர்மமான ‘கல் வட்டம்’ செவ்வாய் மேற்பரப்பில் காணப்பட்டது என்று வேற்றுக் கிரகவாசிகளை தேடுவதாக தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் தெரிவித்தனர்.
நாசாவின் (NASA) செவ்வாய் கிரக கிரியோஸிட்டி ரோவரால் (Mars curiosity rover) எடுக்கப்பட்ட இந்த படம், யுஎஃப்ஒ -வைத் தேடுபவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், செக்யூர்டீம்10 (secureteam10) என்ற யூட்யூப் (youtube) காணொளியில் இடம்பெற்றது.
“பாறைகளை செயற்கையாக அடுக்கி, ஒரு முழு வட்ட வடிவில், விசித்திரமாக உருவாக்கப்பட்டதைப் போல தோன்றுகிறது”, என்று செக்யூர்டீம்10-இனர் கூறுகின்றனர்.
மேலும் செக்யூர்டீம்10-இனர் “இவ்வமைப்பு பொதுவாக செவ்வாய் கிரகத்திலோ, சந்திரன் மற்றும் சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களிலோ காணப்படும் இதர பள்ளங்களைப் போன்றதல்ல; வட்டவடிவ அமைப்பில் இந்த பாறைகள் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டதைப் போல் தோன்றுகிறது – அல்லது – அது அழிந்தோ அல்லது புதைந்தோ இருக்கும் மிகப்பெரிய அமைப்பின் பகுதியாகவோ, இடிபாட்டுப் பகுதியாகவோ கூட இருக்கலாம்” என்றும் கூறியுள்ளனர்.
இந்த காணொளியைக் குறித்து பலரும் கருத்துக்களை எழுதியுள்ளனர். சிலர், இப்பாறைகள் செயற்கையாக வட்ட வடிவில் அமைக்கப் பட்டவை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.
“உண்மையில் எனக்கு ஒரு இயற்கையான பள்ளம் போல தோன்றுகிறது, “என்று ஒரு கருத்துரையாளர் குறிப்பிட்டார். “இது பொதுவாக காணப்படும், இயற்கையால் மாற்றமடைந்த ஒரு பாறையைப் போல தோன்றுகிறது” என்று மற்றொரு விமர்சகர் எழுதினார், “செவ்வாய் கிரகத்தில் காணப்படும் இந்த வட்டம் (சாப்பிடும் உணவான) பேகலின் ஒரு பகுதியாக இருக்குமோ” என்று மற்றொருவர் கேட்டுள்ளார்.