Day: June 22, 2017

ஈத் பண்டிகையின் போது கத்தாரிலுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்கள்

மற்ற வளைகுடா நாடுகளால் பயண மற்றும் வர்த்தக புறக்கணிப்பினால் பாதிக்கப்பட்ட கத்தாரில் வாழும் இந்தியர்கள் ஈத் பண்டிகையின் போது நாடு திரும்புவதற்கு உதவியாக சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று இந்தியா அறிவித்தது. கொச்சி, திருவனந்தபுரம், மும்பை ஆகிய இடங்களிலிருந்து ஏர் இந்தியா மற்றும் தனியார் விமான சேவைகள் தோகாவுக்கு கூடுதலான விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கத்தார் நாட்டில் இந்தியர்கள் இக்கட்டான நிலையில் …

ஈத் பண்டிகையின் போது கத்தாரிலுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்கள் Read More »

Share

பேஸ்புக், பயனர்கள் அவர்தம் சுயவிவர படங்களை கட்டுப்படுத்தும் கருவிகளை வழங்குகிறது

பேஸ்புக், தமது பயனர்கள், அவர்தம் சுயவிவர படங்களை (profile pictures) பிறர் தரவிறக்காமல் கட்டுப்படுத்தும் மென்பொருள் கருவிகளை, இந்தியர்களுக்கு சோதனைமுறையில் இப்போது வழங்கத் துவங்கியுள்ளது. நேற்று பேஸ்புக் வெளியிட்ட அறிவிப்பின்படி, தனியுரிமை உணர்வுடைய(privacy conscious) நபர்களின் பயன்பாட்டிற்காக, இந்தியாவில் புதிய மென்பொருள் கருவிகளை(software tools) சோதனை முறையில் வெளியிட்டுள்ளது. இக்கருவிகளை உபயோகித்து தனிநபர்கள் தங்கள் சுயவிவரப் படங்களை (profile pictures) யார்யார்  தரவிறக்கம் செய்யலாம் அல்லது பகிர்ந்து கொள்ளலாம் என்பதைக் கட்டுப்படுத்த முடியும். இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த …

பேஸ்புக், பயனர்கள் அவர்தம் சுயவிவர படங்களை கட்டுப்படுத்தும் கருவிகளை வழங்குகிறது Read More »

Share

மைக்கேல் பெல்ப்ஸ் வெள்ளை சுறாவுடன் போட்டியிடபோகிறார்

நீச்சலில் ஜாம்பவானாக உலக அளவில் கொண்டாடப்படும் தடகள வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், கடலில் மிகவும் திறமையாக வேட்டையாடும் சுறாவோடு போட்டியிட இருப்பதாக டிஸ்கவரி சானல் தொலைக்காட்சியின் செய்தி வெளியிட்டு உள்ளது. 31 வயதாகும் பெல்ப்ஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் மட்டும் 23 தங்கப்பதக்கங்களை பெற்று 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு பின்னர் ஓய்வு பெற்றுள்ளார். மைக்கேல் பெல்ப்ஸ்  நீந்துகின்றபோது, அதிகபட்சமாக மணிக்கு 6 மைல் வேகத்தில் செல்லும் திறனுடையவர்.ஆனால், மிகப் பெரிய வெள்ளை சுறா மணிக்கு 25 மைல் …

மைக்கேல் பெல்ப்ஸ் வெள்ளை சுறாவுடன் போட்டியிடபோகிறார் Read More »

Share

நீச்சல் போட்டி: இங்கிலீஷ் கால்வாயை தாண்டி 66 வயது பாட்டி சாதனை

ஒவ்வொரு வருடமும்  கால்வாய் நீச்சல்  அசோசியேஷன்(Channel Swimming Association ) சர்வதேச அளவில் நீச்சல் போட்டி நடத்தி வருகிறது.  இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த வருடம் சி.எஸ்.ஏ நடத்திய நீச்சல் போட்டியில் ஐக்கிய நாட்டைச் சேர்ந்த பட் ஹலண்ட் ஷார்டீ  வெற்றி பெற்றுள்ளார்.66 வயதான இவர் பல தடைகளை  மீறி வென்றுள்ளார். நீரின் வெப்பம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. மேலும் அவர் முகத்தில் ஜெல்லி பிஷ் கடித்தது. இதையும் மீறி அவர் …

நீச்சல் போட்டி: இங்கிலீஷ் கால்வாயை தாண்டி 66 வயது பாட்டி சாதனை Read More »

Share

விஜய் பிறந்த நாளையொட்டி, அவரது 61–வது படத்தின் பெயர் அறிவிப்பு

அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோ சார்பில் முரளி ராமசாமி தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இது விஜய்யின் 61–வது படம் ஆகும். ஏற்கனவே ‘தெறி’ படத்தில் சேர்ந்து பணியாற்றிய விஜய்யும் அட்லியும் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இதில் விஜய் 3 வேடங்களில் …

விஜய் பிறந்த நாளையொட்டி, அவரது 61–வது படத்தின் பெயர் அறிவிப்பு Read More »

Share

பூமியை விண்கல் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது : வானியல் ஆய்வாளர்

பூமியைச் சுற்றியுள்ள விண்கற்களில் ஒன்று வெகு விரைவில் பூமியில் மோதப்போவதாக அயர்லாந்திலுள்ள வானியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் இப்பேரழிவு நடக்கலாம் என்றும் கூறியுள்ளார். அயர்லாந்தில் உள்ள ((Queen’s University Belfast)) குவீன்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர் ((Alan Fitzsimmons)) ஆலன் ஃபிட்சிம்மன்ஸ், 1908 ஆம் ஆண்டு சைபீரியாவில் விண்கல் விழுந்து 800 சதுர கிலோ மீட்டர் தொலைவிற்கு சேதம் விளைவித்ததைப் போல் இன்றைய உலகில் அப்படிப்பட்ட விண்கல் மோதல் நடைபெறும்போது பெரிய …

பூமியை விண்கல் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது : வானியல் ஆய்வாளர் Read More »

Share

விசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டது

ஒரு மர்மமான ‘கல் வட்டம்’ செவ்வாய் மேற்பரப்பில் காணப்பட்டது என்று வேற்றுக் கிரகவாசிகளை தேடுவதாக தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் தெரிவித்தனர். நாசாவின் (NASA)  செவ்வாய் கிரக கிரியோஸிட்டி ரோவரால்  (Mars curiosity rover) எடுக்கப்பட்ட இந்த படம், யுஎஃப்ஒ -வைத் தேடுபவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்,  செக்யூர்டீம்10  (secureteam10) என்ற யூட்யூப் (youtube) காணொளியில் இடம்பெற்றது. “பாறைகளை செயற்கையாக அடுக்கி, ஒரு முழு வட்ட வடிவில், விசித்திரமாக உருவாக்கப்பட்டதைப் போல தோன்றுகிறது”, என்று செக்யூர்டீம்10-இனர் கூறுகின்றனர். மேலும் செக்யூர்டீம்10-இனர்  “இவ்வமைப்பு …

விசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டது Read More »

Share

பிலிப்பைன்ஸில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மார்வாய் நகரத்தில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் அரசு ஆதரவு படைகளுடன் சண்டையிட்டனர். அப்போது, அரசு ஆதரவு படைகளை திசை திருப்பும் வகையில் அங்குள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 300 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களை பணையக்கைதிகளாக சிறை பிடித்து வைத்துள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் சிலரும் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எத்தனை பேர் பணையக்கைதிகளாக பிடிபட்டுள்ளனர் என்பது குறித்தும் அவர்களின் அடையாளம் …

பிலிப்பைன்ஸில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர் Read More »

Share

இஸ்ரோ: ஸ்ரீஹரிகோட்டாவில் 28 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. தற்போது 712 கிலோ எடை கொண்ட 7–வது கார்ட்டோசாட்–2இ …

இஸ்ரோ: ஸ்ரீஹரிகோட்டாவில் 28 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடக்கம் Read More »

Share

சரணடைந்த பொது பல சேனாவின் பொது செயலாளரான ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை

நீதிமன்றத்தில் சரணடைந்த பௌத்த அமைப்பான பொது பல சேனாவின் பொது செயலாளரான ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி, ஜாதிக பல சேன அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்தமை மற்றும் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி கொம்பனி தெரு போலிஸ் நிலையம் முன்பாக இடம் பெற்ற பத்திரிகையாளார்கள் சந்திப்பில் இஸ்லாத்தையும் அல் குர் ஆனையும் அவமதித்தும் நிந்தித்தும் கருத்து வெளியிட்டமை தொடர்பாக கொழும்பு …

சரணடைந்த பொது பல சேனாவின் பொது செயலாளரான ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை Read More »

Share
Scroll to Top