பெல்ஜியம் நாட்டிலுள்ள பிரஸ்ஸல்ஸ் நகர ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி, ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டார். இதன் நிமித்தம் வேறு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜூன் 20-அன்று உள்ளூர் நேரப்படி மாலை 8:49 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாகவும், தாக்குதல் நடந்த ரயில் நிலையத்தில் நெருப்பும், சிறிய அளவிலான வெடிகுண்டு வெடிப்பு நடந்ததையும் நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தினர். அதிகாரிகள் இதை தீவிரவாத தாக்குதல் என்றே வர்ணித்துள்ளனர். மேலும் பெல்ட் பாம்ப் ஒன்றை கைப்பற்றி செயலிழக்கச் செய்ததாக தெரிகிறது. முன்னதாக 30 – 35 வயது இளைஞர் ஒருவர் “அல்லாஹூ அக்பர்” என்று கோஷமிட்டவாறு தனது பயணபெட்டியிலிருந்து எதையோ வெடிக்கச் செய்ய முயன்றதாக கூறப்பட்டது.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலிஸார் தெரிவித்துள்ளனர். ரயில் நிலையங்களும் ரயில்களும் தற்போது இயங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.