அதிகமாகிவிட்ட உடல் எடையைக் குறைப்பதற்காக, தீவிரமாக யோசித்து, யோகா பயிற்சியை மேற்கொள்ளப் போகிறாராம் அனுஷ்கா.
பிரகாஷ் கோவலமுடி இயக்கத்தில் அனுஷ்கா, ஆர்யா நடித்த படம் இஞ்சி இடுப்பழகி. இப்படத்தின் கதைக்காக தன்னுடைய உடலை அதிகளவில் அதிகரித்திருந்தார். அதன் பிறகு உடற்பயிற்சி, யோகா என்று பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனில்லை. அவரால் தன்னுடைய பழைய வடிவத்தை பெற முடியவில்லை. தற்போது உடல் எடையை குறைக்க பட வாய்ப்பை மறுத்து வருகிறார்.
பாகுபலி முதல் பாகத்தைப் போன்று 2ம் பாகத்திலும், அனுஷ்கா ஒல்லியாக இருக்க வேண்டும். ஆனால், 2ம் பாகத்தில் நடிப்பதற்கு அனுஷ்கா உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமௌலி விரும்பினார். அதற்காக கால அவகாசமும் கொடுத்துள்ளார். ஆனால், அதற்குள் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இந்நிலையில், கிராபிக்ஸ் மூலம், அனுஷ்காவை ஒல்லியாக காண்பிக்க பல கோடி ரூபாய் செலவும் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
எடையை குறைக்க டயட், உடற்பயிற்சி இப்படியெல்லாம் செய்தும் ஒரு பயனும் கிடைக்கவில்லை. எனவே, யோகா பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உடல் எடையை குறைக்க அனுஷ்கா முடிவு செய்திருக்கிறார்.