Day: June 21, 2017

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சி: நடிகை ஈஸ்வரி ராவ்

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது தன்னுடைய குழந்தைகளை அதிரவைத்து இருப்பதாக நடிகை ஈஸ்வரி ராவ் தெரிவித்துள்ளார். ‘கபாலி’ வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘காலா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஜினி மும்பையைச் சேர்ந்த தாதாவாக நடிக்கிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாத இறுதியில் மும்பையில் தொடங்கியது.  இந்தப் படத்தில் பாலிவுட் நடிகைகள் அஞ்சலி பாட்டில், ஹூமா குரோஷி, நானா …

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சி: நடிகை ஈஸ்வரி ராவ் Read More »

Share

உடல் எடையைக் குறைக்க அனுஷ்கா தீவிர முயற்சி

அதிகமாகிவிட்ட உடல் எடையைக் குறைப்பதற்காக, தீவிரமாக யோசித்து, யோகா பயிற்சியை மேற்கொள்ளப் போகிறாராம் அனுஷ்கா. பிரகாஷ் கோவலமுடி இயக்கத்தில் அனுஷ்கா, ஆர்யா நடித்த படம் இஞ்சி இடுப்பழகி. இப்படத்தின் கதைக்காக தன்னுடைய உடலை அதிகளவில் அதிகரித்திருந்தார். அதன் பிறகு உடற்பயிற்சி, யோகா என்று பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனில்லை. அவரால் தன்னுடைய பழைய வடிவத்தை பெற முடியவில்லை. தற்போது உடல் எடையை குறைக்க பட வாய்ப்பை மறுத்து வருகிறார். பாகுபலி முதல் பாகத்தைப் போன்று 2ம் பாகத்திலும், …

உடல் எடையைக் குறைக்க அனுஷ்கா தீவிர முயற்சி Read More »

Share

ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜூன் 30 நள்ளிரவிலிருந்து அமலாகிறது

ஜி.எஸ்.டி. என்ற சரக்கு சேவை வரி விதிப்பு வரும் 30ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். “ஜி.எஸ்.டி.யின் செயல்பாட்டிற்காக பல்வேறு கருத்தியல்களுடைய  அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதையும் ஒரு மாற்றத்தையும் இந்த உலகமே காணப்போகிறது” என்று பிரதமர் மோடி லக்னவில் தெரிவித்தார். மேலும் அவர், ஜூலை 1-ல் ஜிஎஸ்டி துவங்கப்போவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். நாடு முழுவதும் இப்போது உற்பத்தி வரி, நுழைவு வரி, …

ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜூன் 30 நள்ளிரவிலிருந்து அமலாகிறது Read More »

Share

அமெரிக்க நிறுவனமான லாக்ஹீட்-மார்டினுடன் டாடா போர் விமானங்கள் தயாரிக்க ஒப்பந்தம்

இந்தியாவில் ஃஎப் 16 ரக போர் விமானங்களை தயாரிக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீடு மார்டின் நிறுவனத்துடன் டாடா அட்வாண்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் இந்திய ராணுவத்தில் பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டர்களை வெல்ல ஃபோர்ட் வொர்த் டெக்சாஸ் ஆலை திட்டமிட்டுள்ளது. இந்திய ராணுவம் வசம் உள்ள சோவியத் சகாப்த விமானங்களை மாற்ற திட்டமிட்டுள்ளது. அதனால் இ ந்திய விமானபடைக்கு நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் தேவைப்படுகிறது. ராணுவ தளவாட பொருட்களை வெளிநாட்டு …

அமெரிக்க நிறுவனமான லாக்ஹீட்-மார்டினுடன் டாடா போர் விமானங்கள் தயாரிக்க ஒப்பந்தம் Read More »

Share

பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் தாக்குதல்: தற்கொலை குண்டுதாரி கொல்லப்பட்டார்

பெல்ஜியம் நாட்டிலுள்ள பிரஸ்ஸல்ஸ் நகர ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி, ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டார். இதன் நிமித்தம் வேறு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜூன் 20-அன்று உள்ளூர் நேரப்படி மாலை 8:49 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாகவும், தாக்குதல் நடந்த ரயில் நிலையத்தில் நெருப்பும், சிறிய அளவிலான வெடிகுண்டு வெடிப்பு நடந்ததையும் நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தினர். அதிகாரிகள் இதை தீவிரவாத தாக்குதல் என்றே வர்ணித்துள்ளனர். மேலும் பெல்ட் பாம்ப் ஒன்றை கைப்பற்றி …

பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் தாக்குதல்: தற்கொலை குண்டுதாரி கொல்லப்பட்டார் Read More »

Share
Scroll to Top