மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல், அரசு ஊழியர்களின் சேவைத் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களுக்கு குறித்த நேரத்தில் ஊழியர்கள் வந்து பணியாற்ற வேண்டும்; தங்களுக்கு இடப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.அரசு தீவிரம்இந்நிலையில், நாடு முழுவதும், மத்திய அரசு பணியில் உள்ள, 67 ஆயிரம் பேரின் சேவை தொடர்பான ஆவணக் குறிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நடவடிக்கை எடுப்பதில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் அடக்கம்.இது குறித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மூத்த அதிகாரி ஒருவர், நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களில், சேவையில் மெத்தனம் காட்டுபவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.கடும் நடவடிக்கைகுறித்த நேரத்துக்கு அலுவலகத்துக்கு வராமை, தங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்காமல் காலந்தாழ்த்துதல் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கீனங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசில் பணியாற்றி வரும், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., – ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் உட்பட, 67 ஆயிரம் ஊழியர்களின் பணி ஆவணங்கள் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன.