Day: June 19, 2017

லண்டன் மசூதியினருகில் தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்தது

லண்டன் மசூதியினருகில் தாக்குதல் நடத்தியவர் பெயர், டெரன் ஆஸ்பர்ன் என்றும், கார்டிஃபைச் சேர்ந்த அவரது வயது 47 என்றும் தெரியவந்துள்ளது. வடக்கு லண்டனில் உள்ள ஒரு மசூதியின் அருகே கூடியிருந்த இஸ்லாமியர்கள் மீது ஒரு வேன் மோதப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் எல்லா வகையான தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தையும் ஒடுக்க தமது அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் ஒரு ஆண் உயிரிழந்தார்.  இது இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிகிறது …

லண்டன் மசூதியினருகில் தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்தது Read More »

Share

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம்தேதி நடைபெறுகிறது. இன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் அக்டோபர் 1 1945-ல் பிறந்தார். தலித் பின்னணியைக் கொண்டவர். …

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு Read More »

Share

போர்ச்சுக்கல் காட்டுத் தீ : தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்

மத்திய போர்ச்சுகல் கோயம்பிராவிற்கு அருகில் காட்டுத்தீயானது கடுமையாக பரவியதால் 61 பேர் இதுவரை இறந்துள்ளனர்; மேலும் பலர்  காயமடைந்துள்ளனர். “இந்த காட்டுத்தீ  சமீபத்திய ஆண்டுகளின் மிகப்பெரிய சோகமான நிகழ்வாகும் ” என அதிகாரிகள் விவரித்துள்ளனர். இக்காட்டுத்தீ மின்னலால் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  இந்த காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க முயலுகையில் பலர் அவர்களது காரிலேயே இறந்துள்ளனர். மூன்று நாட்களுக்கு போர்த்துக்கல் அரசாங்கம் துக்கம் அனுசரிக்க உள்ளது.

Share

உலக ஹாக்கி லீகில் இந்தியா பாகிஸ்தானை வென்றது

உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி பாக்., அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. லண்டனில் உலக ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அடுத்து 2வது …

உலக ஹாக்கி லீகில் இந்தியா பாகிஸ்தானை வென்றது Read More »

Share

அரசு ஊழியர்களின் பணி ஆவணங்கள் அதிரடி சோதனை

மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல், அரசு ஊழியர்களின் சேவைத் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களுக்கு குறித்த நேரத்தில் ஊழியர்கள் வந்து பணியாற்ற வேண்டும்; தங்களுக்கு இடப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.அரசு தீவிரம்இந்நிலையில், நாடு முழுவதும், மத்திய அரசு பணியில் உள்ள, 67 ஆயிரம் பேரின் சேவை தொடர்பான ஆவணக் குறிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நடவடிக்கை எடுப்பதில், மத்திய …

அரசு ஊழியர்களின் பணி ஆவணங்கள் அதிரடி சோதனை Read More »

Share

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பாக வழக்கு பதிய தேர்தல் கமிஷன் பரிந்துரை

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த, பணப் பட்டுவாடா விவகாரத்தில், வழக்கு பதிவு செய்யும் படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதன் படி நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணைய உயரதிகாரி இன்று கொடுத்துள்ள விளக்கத்தின்படி “தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தில் வழக்கு பதிவு செய்ய மட்டுமே பரிந்துரை செய்ததாகவும், முதல்வர் பெயரையோ, …

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பாக வழக்கு பதிய தேர்தல் கமிஷன் பரிந்துரை Read More »

Share
Scroll to Top