மைசூரு ராஜ பரம்பரையின் வாரிசும் 400 ஆண்டுகள் சாபமும்

தற்போதைய கர்நாடகா மாநிலத்தின் மைசூரு நகரை, 400 ஆண்டுகளுக்கு முன், விஜயநகர பேரரசின் திருமல ராஜா ஆட்சி செய்துவந்தார். அப்போது உடையார் அரசை சேர்ந்த ராஜா உடையார், மைசூரு மீது படையெடுத்து, வெற்றி பெற்றார்.

இதையடுத்து, திருமல ராஜா உடையார் குடும்பத்தினர், ஸ்ரீரங்கபட்டணத்தினுள்  நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள்,அருகிலுள்ள மாலகி கிராமத்தில் தங்கியிருந்தனர். திருமல ராஜா உடையாரின் இரண்டாவது மனைவி அலமேலம்மா அணிந்திருந்ததங்க ஆபரணங்கள், ராஜா உடையாருக்கு மிகவும் பிடித்து போனது. தன் படையினரை அனுப்பி, நகைகளை வாங்கி
வரும்படி கூறினார்.

இதற்கு அலமேலம்மா மறுப்பு தெரிவித்தார். அரசரோ, நகைகளை வலுக்கட்டாயமாக வாங்கி வரும்படி ஆணையிட்டார். இதனால்,அலமேலம்மா, அங்கிருந்து தப்பியோடினார்; அவரை, படையினர் துரத்தினர்.மலை உச்சிக்கு சென்ற அலமேலம்மா, ‘தலக்காடுமணலாகட்டும், மாலகி கிராமம் புதை குழியில் மூழ்கட்டும், மைசூரு உடையார் பரம்பரைக்கு வாரிசு இல்லாமல் போகட்டும்’ என,சாபமிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மைசூரு அரச குடும்பத்தினருக்கு வாரிசுகளே பிறக்கவில்லை.

தற்போதைய மைசூரு உடையார் பரம்பரையினரான,  ஸ்ரீகண்டதத்த நரசிம்ம ராஜ உடையார் – பிரமோதா தேவிக்கு குழந்தைபேறு இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்ட ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார், 2013ல் காலமானார். இதையடுத்து, பிரமோதா தேவி, தன் உறவினர் மகனான, யதுவீரை, 2015ல், தத்தெடுத்தார்.

அவருக்கு, மைசூரு மன்னராக பட்டாபிஷேகமும் சூட்டப்பட்டது. 2016ல், யதுவீருக்கும், ராஜஸ்தான் துங்கார்பூர் அரச குடும்பத்தைசேர்ந்த திரிஷிகா குமாரிக்கும் திருமணம் நடந்தது.திருமணமாகி ஓராண்டான நிலையில், திரிஷிகா குமாரி, நான்கு மாத கர்ப்பமாகஇருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, அரச குடும்பத்திடம் கேட்டால், வாய் திறக்க மறுக்கின்றனர்.

இந்த தகவல், மைசூரு முழுவதும் பரவியதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டுமின்றி, விஜயநகர பேரரசின் திருமலராஜாவின் இரண்டாவது மனைவி அலமேலம்மாவின் சாபம் நீங்கி விட்டது என்று அரச குடும்பத்தினர் குதுாகலம் அடைந்துள்ளனர்.உடையார் பரம்பரையில், ஆறு அரசர்களுக்கு குழந்தை பேறு இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top