அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாயினர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் யு.பி.எஸ். மையம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தை குறிவைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சக்கர்பெர்க் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக விர்ஜ்னியா மாகாணத்தில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குடியரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்டீவ் ஸ்காலிஸ் பேஸ்பால் உயிரிழந்தார். இந்நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.