அமெரிக்க பெடரல் அட்டார்ணி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ் இன்று செனட்டில் சாட்சியம் அளிக்கையில், 2016 தேர்தலின் போது அவர் ரஷ்யாவுடன் இணக்கமாக செயல்பட்டார் என்று எதிர்கட்சியும் ஊடகங்களும் சொல்வது கொடுரமான, வெறுக்கத்தக்க பொய் என்று கூறினார். மேலும், எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கம் செய்த விஷயத்தில் தனது பங்களிப்பு மிகவும் சரியானதே என்றார்.
மேலும் அவர் செனட் புலனாய்வுக் குழுவிடம் கூறியதாவது :
எந்தவொரு ரஷ்யருடனோ அல்லது எந்த வெளிநாட்டு அதிகாரிகளுடனோ நான் தேர்தல் பிரச்சாரத்திலோ அல்லது தேர்தலிலோ தலையீடு குறித்து எந்த உரையாடலையும் நடத்தவில்லை. டிரம்ப்-ன் பிரச்சாரக் குழுவைச் சார்ந்த எவரும் இது குறித்து ஏதேனும் உரையாடல் நடத்தினார்களா என்றும் எனக்குத் தெரியாது.