சென்ற ஆண்டு நவம்பர் மாத்தில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.
இந்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வங்கித் துறையில் நீண்ட கால பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.15,000 கோடி மதிப் புள்ள பங்குகளை விற்பதற்கான நிறுவன முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஸ்டேட் வங்கி இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறது.
இதன் காரணமாக வங்கிகள் மற்றும் மற்ற கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நிகர வட்டி வரம்பு மற்றும் இதர வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பணமதிப்பு நீக்க முடிவால் நிலையில்லாத் தன்மை ஏற்பட் டுள்ளது. வங்கித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாக முதலீட்டாளர்களிடம் விளக்கி யுள்ளது. மேலும் பணமதிப்பு நீக்கத்தால் தொடர்ந்து இந்திய பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. இதனால் வங்கித் துறை கடுமையாக பாதிக்கப் படலாம் எனவும் கூறியுள்ளது.