மூலிகை மருத்துவம் தொன்றுதொட்டு நம் இந்திய நாட்டிலும் உலகில் பல இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. தீக்காயம், வயிற்றுப்புண், வாயுத்தொல்லை, தூக்கமின்மை முதலான பல நோய்களையும் தீர்க்க பயன்பட்டு வருகிறது.
இந்த தொடரில், நம் உடல்நலனுக்கு உபயோகமாகும் சில மூலிகைகளைப் பற்றி பார்க்கலாம்.
1) புதினா
புதினா மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகை. புதினா இலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ-யை குடிப்பதால் வலி, வாயுத்தொல்லை, அஜீரணம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். இம்மூலிகையால் மாதவிடாய் வலி நிவாரணமும் பெற முடியும். புதினா செடியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு ஆவிபிடிப்பதால் இழுப்பு, ஆஸ்த்மா, லாரிஞ்சைட்டிஸ் போன்ற நோய் உடையவர்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்யலாம். மேலும் இது இரத்தத்திலிருந்து சிறுநீரைப் பிரிக்கவும் (diuretic) உதவுகிறது.
2) எகினெசியா (ECHINACEA)
எகினெசியா அல்லது ஊதா நிற டெய்சி பூ என்று அழைக்கப்படும் இம்மூலிகை அமெரிக்காவில் அதிகமாக வளர்கிறது. இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களைக் குணமாக்கவும் பயன் படுகிறது.
இதிலிருந்து உருவாக்கப்படும் கஷாயம் குளிர் நடுக்கம், வயிற்றுப்புண், காய்ச்சல், டான்சில்ஸ் நோய் ஆகியவற்றை குணப்படுத்தும். இதனை வாய்கழுவியாகவும் (mouthwash) உபயோகிக்கலாம்.
மேலும் இதனை இரத்தவிஷ நோயைக் குணப்படுத்தவும், வலி நிவாரணியாகவும், குமட்டலை சரியாக்கவும் வெறு சில மருந்துவ முறைகளிலும் உபயோகிக்கிறார்கள்.