பருவநிலை மாற்றத்தை (Climate change) எதிர்கொள்வதன் மூலம் உலகிலுள்ள பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம். ஆனால். அவை முன்னர் இருந்ததைபோல தோன்றாது என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது.நிறம் தரக்கூடிய பாசி உருவாவதை தடுக்கின்றபோது, பவளப் பாறைகள் வெளுத்துப்போகிறதுஇயற்கை அமைப்புகளின் விரைவான மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்ற திறனுடைய பவளப் பாறைகளின் மூலம், எதிர்கால இந்த பவளப்பாறை அடுக்குகள் வரையறுக்கப்படும் என்று நேச்சர் இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்படுகிறது.ஏப்ரல் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் மிக பெரிய பவளப் பாறை அடுக்குகளில் மூன்றில் இரண்டு பகுதி, இரண்டு ஆண்டுகளில் நிறம் குன்றி வெளுத்துப்போயிற்று என்பதை இந்த ஆய்வு காட்டியது.உடனடி நடவடிக்கைள் மூலம் அரசுகள் இந்த பவளப் பாறைகளை பாதுகாத்துகொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.பவள பாறைகளுக்கு இடையில் மீன்கள்படத்தின் காப்புரிமை இந்த பவளப் பாறைகள் அடுத்த நூற்றாண்டும் தொடர்ந்து இருக்கும் என்று நம்புவதாக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தலைமை ஆய்வு ஆசிரியரான பேராசிரியர் டெர்ரி ஹியூஸ் தெரிவித்திருக்கிறார்.“ஆனால், எதிர்காலத்தில் காணப்படும் இந்த பவளப் பாறைகள் மிகவும் வேறுப்பட்டதாக இருக்கப்போகின்றன” என்று அவர்பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.“ஏற்கெனவே இருக்கக்கூடியவற்றை அப்படியே மீட்டெடுப்பது நடைபெறும் காரியமல்ல.
வேறுபட்ட இனங்களின் கலவை இதில் இருக்கும்“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும்