மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா திடீரென சென்னை போயஸ் தோட்ட இல்லத்திற்குள் நுழைய முயல்வதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல ஜெ.தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஜெ.தீபா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நீண்ட நேரம் கழித்து போயஸ் கார்டனைவிட்டு வெளியே வந்த ஜெ.தீபா செய்தியாளர்களிடம் பேசினார். மிகவும் பதற்றமாக காணப்பட்ட அவர் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விவரித்தார், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றார்.
ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்த அவரது சகோதரர் தீபக் அழைத்ததால் அங்கு சென்றதாகவும், தீபக் அவரை திட்டமிட்டு அழைத்து ஏமாற்றி பிரச்சனை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேசப்போவதாகவும் கூறியுள்ளார்.