ஜெலீனா ஆஸ்டாபென்கோ ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்

டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இது வரை இடம்பெறாத வீராங்கனையான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, 2017-ஆம் ஆண்டின் மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும், லாத்வியா நாட்டை சேர்ந்த முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் என்ற பெருமையை ஜெலீனா ஆஸ்டாபென்கோ பெற்றுள்ளார்.

இன்று சனிக்கிழமை நடந்த மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதியாட்டத்தில், 20 வயதான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, முதல் செட்டை இழந்து பின்தங்கி இருந்த போதிலும், பின்னர் போராடி 4-6 6-4 6-3.என்ற செட் கணக்கில், தன்னை எதிர்த்து விளையாடிய முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப்பை ஆஸ்டாபென்கோ வென்றார்.

கடந்த 1933-ஆம் ஆண்டுக்கு பிறகு, முதல்முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற தரவரிசையில் இடம்பெறாத வீராங்கனை என்ற சாதனையையும் ஜெலீனா ஆஸ்டாபென்கோ படைத்துள்ளார்.

தனது வெற்றி குறித்து பேசிய ஜெலீனா ஆஸ்டாபென்கோ, ”எனது 20 வயதில் நான் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகி விட்டேன் என்று என்னால் நம்பமுடியவில்லை. இந்த மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இது எனது கனவு; இது நிறைவேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top