நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த், 2வது தோல்வியடைந்தார் . இவர், நான்காவது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியிடம் வீழ்ந்தார்.
‘உலக சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் நார்வே செஸ் தொடர், ஸ்டாவன்ஜர் நகரில் நடக்கிறது. இதன் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 33வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார். முன்னதாக 2வது சுற்றில் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கிடம் வீழ்ந்தார். மற்ற 4வது சுற்றுப் போட்டிகளில் அமெரிக்காவின் நகமுரா (எதிர்- வாசியர் லாக்ரேவ்), ஆர்மேனியாவின் ஆரோனியன் (எதிர்- கார்ல்சன்) வெற்றி பெற்றனர்.
நான்கு சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா (3 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தை தலா 2.5 புள்ளிகளுடன் ஆர்மேனியாவின் ஆரோனியன், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக், பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆனந்த் (1) 10வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.