நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர்கான் நடிப்பில் சீனாவில் வெளியான தங்கல் திரைப்படம் சுமார் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர் கான் நடித்த படம், உண்மை சம்பவத்தை தழுவிய தங்கல். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டு வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து சீனாவில் மே 5ம் தேதி, வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு அங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் சீனாவில் தற்போது வரை சுமார் 1130 கோடி ரூபாயும், உலகம் முழுக்க மொத்தம் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாள்களில் 2000 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சீனாவில் வெளியான படங்களின் டாப் 20 இடத்தில் தங்கல் படம் இடம் பிடித்துள்ளது.