ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவலை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரம் வரை பனிலிங்கம் உருவாவது வழக்கம். இதை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம்.
இந்தாண்டிற்கான, அமர்நாத் யாத்ரா, ஜூன் 29 ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த யாத்திரையை சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை தாண்டிய ஊடுருவலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அங்கு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் சதியை முறியடித்து கடந்த 96 மணி நேரத்தில் 13 தீவிரவாதிகள் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.