Day: June 11, 2017

பொதுவாக்கெடுப்பே ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு: ஸ்டாலின்

ஈழத்தமிழர் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையருக்கு திமுக செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ அரசியல் தீர்வு நிச்சயம் தேவை என்றும் அரசியல் தீர்வை ஏற்படுத்த பொது வாக்கெடுப்பால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு ஐ.நா. மனிதஉரிமை கவுன்சில் கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Share

சொந்த மண்ணில் 100 மீ. ஓட்டத்தில் வெற்றியுடன் விடைபெற்றார் உசேன் போல்ட்

உலகின் அதிவேக மனிதராக 8 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த உசேன் போல்ட், சொந்த மண்ணில் பங்கேற்ற கடைசி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் அபாரமாக வென்று அசத்தினார்.  2008 – ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்கிலிருந்து தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்று  சாதனை வீரராக படைத்த ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் , சர்வதேச போட்டிகளில் …

சொந்த மண்ணில் 100 மீ. ஓட்டத்தில் வெற்றியுடன் விடைபெற்றார் உசேன் போல்ட் Read More »

Share

பிரெஞ்ச் ஓபன் : 10வது முறையாக ரபேல் நடால் சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்தார். விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் (3வது ரேங்க்) நேற்று மோதிய நடால், அதிரடியாக விளையாடி 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்தி …

பிரெஞ்ச் ஓபன் : 10வது முறையாக ரபேல் நடால் சாம்பியன் Read More »

Share

செஸ்: இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த் தோல்வி

நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த், 2வது தோல்வியடைந்தார் . இவர், நான்காவது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியிடம் வீழ்ந்தார். ‘உலக சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் நார்வே செஸ் தொடர், ஸ்டாவன்ஜர் நகரில் நடக்கிறது. இதன் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 33வது நகர்த்தலின் …

செஸ்: இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த் தோல்வி Read More »

Share

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி: இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபிக்கான போட்டிகளில் இன்று இந்தியா,  தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரை இறுதிக்குச் செல்ல தகுதி பெற்றது. டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா.  இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி ஆடியது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்தியா 192 ரன்கள் இலக்கை  38 ஓவர்களிலேயே எளிதாகக் கடந்தது. ஷிகர் தவான் 78 ரன், விராட் கோலி 76 ரன்களுடனும், யுவராஜ் 23 …

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி: இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது Read More »

Share

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபிக்கான போட்டிகளில் இன்று இந்தியா,  தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.  இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும், தோல்வியடையும் அணி வீட்டுக்கு கிளம்பும். அதனால் இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா.  இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி ஆடி வருகிறது. தற்போது இந்தியா 10 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்துள்ளது. …

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா Read More »

Share

சீனாவில் தங்கல் சாதனை: ரூ.1913 கோடி வசூல்

நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர்கான் நடிப்பில் சீனாவில் வெளியான தங்கல் திரைப்படம் சுமார் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர் கான் நடித்த படம், உண்மை சம்பவத்தை தழுவிய தங்கல். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டு வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து சீனாவில் மே 5ம் தேதி, வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு அங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் …

சீனாவில் தங்கல் சாதனை: ரூ.1913 கோடி வசூல் Read More »

Share

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவலை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரம் வரை பனிலிங்கம் உருவாவது வழக்கம். இதை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்தாண்டிற்கான, அமர்நாத் யாத்ரா, ஜூன் 29 ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த யாத்திரையை சீர்குலைக்கும் வகையில், …

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி Read More »

Share

எய்ம்ஸ் இடம் தேர்வில் பொய்யான தகவல்: மதுரை ‘எய்ம்ஸ்’ போராட்டக்குழு புகார்

எய்ம்ஸ் இடம் தேர்வில் பொய்யான தகவல் என  தமிழக அரசு மீது மதுரை ‘எய்ம்ஸ்’ போராட்டக்குழு புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து அந்த இயக்க ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனை அமைப்பது குறித்து தமிழக அரசிடம் மத்திய சுகாதார அமைச்ச கம் 10 கேள்விகளுக்கு பதில் அளித்து அறிக்கை அனுப்புமாறு கேட்டிருந்தது. அதற்கு பதில் அனுப்பாமல் நீண்ட நாள்களாக தாமதம் செய்து வந்த தமிழக அரசு கடந்த 5.5.2017-ம் தேதி சுகாதாரத் …

எய்ம்ஸ் இடம் தேர்வில் பொய்யான தகவல்: மதுரை ‘எய்ம்ஸ்’ போராட்டக்குழு புகார் Read More »

Share

போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தீபா நுழைய முயன்றதால் பதற்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா திடீரென சென்னை போயஸ் தோட்ட இல்லத்திற்குள் நுழைய முயல்வதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல ஜெ.தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஜெ.தீபா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நீண்ட நேரம் கழித்து போயஸ் …

போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தீபா நுழைய முயன்றதால் பதற்றம் Read More »

Share
Scroll to Top