ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதிப்பு 8ல் பல்வேறு புதிய வசதிகளுடன் முந்தைய இயங்குதளங்களுடன் ஒப்பீடுகையில் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் உள்பட ஸ்மார்ட் அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.
ஆண்ட்ராய்டு என் எனப்படும் நௌகட் இயங்குதளத்தை தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த புதிய பதிப்பில் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் மிகப்பெரிய வருமானம் வரும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.ஆண்ட்ராய்டு 8.0 ஒ-இன் பீட்டா பதிப்பை அதன் சாதனங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது, கடந்த காலத்தைப் போலவே, அதன் கைபேசிகளும், கூகிள் பிக்சல், பிக்சல் எக்ஸ்எல், நெக்ஸஸ் 5 எக்ஸ், நெக்ஸஸ் 6 பி, பிக்சல் சி மற்றும் நெக்ஸஸ் பிளேயர் ஆகியவற்றில் கிடைக்கும் என எதிப்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஓஎஸ் மூலம் நீங்கள் ஒரு செயலியில் இருந்து இன்னொரு செயலியில் காப்பி செய்து பேஸ்ட் செய்வது எளிதாகிவிடுகிறது. அதேபோல் நீங்கள் காப்பி செய்த விவரங்கள் வேறு எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை செர்ச் இஞ்சின் மூலமும் தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு. இதனால் அதிக சிரமங்கள் இல்லாமல் பல விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.தற்போது வந்த இந்த வசதியைப் பொறுத்தமட்டில் ஒரு டெக்ஸ்ட் மெசேஜில் வந்த முகவரியை நீங்கள் க்ளிக் செய்தால் உடனே அந்த முகவரி கூகுள் மேப்பில் ஓபன் ஆகும். நீங்கள் அந்த முகவரியை காப்பி செய்து அதன் பின்னர் கூகுள் மேப் சென்று பேஸ்ட் செய்து தேட வேண்டிய அவசியம் இருக்காது.
நோக்கியா 3, நோக்கியா 5,மற்றும் நோக்கியா 6 ஆகியவற்றுடன் அண்ட்ராய்டு ஓ மேம்படுத்தல் கிடைக்கும் என்று எச்எம்டி குளோபல் அறிவித்துள்ளது. இது விண்டோஸ் ஒஎஸ்-இல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மொபைல்போன்களில் இந்த ஆண்ட்ராய்டு 8.0 ஒ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது