இலங்கையிலிருந்து தொழில் வாய்ப்பிற்காக சவூதி அரேபியாவிற்கு சென்ற தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரியாத்திலுள்ள இலங்கைத்தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் உறவினர்களை தொடர்புகொள்வதற்கு பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
இதில் குருசாமி ஐயா ரஞ்சிதம் என்ற 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும் குறித்த பெண்ணின் தேசிய அடையாள அட்டையில் – C. 31/B வண்ணான்கேணி, பளை என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கடவுச்சீட்டில் – 66/8, புனித ஜேம்ஸ் வீதி, கொழும்பு – 15 என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளதாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கொன்சியூலர் பிரிவிற்கு அறிவித்துள்ளது.
இவரைப்பற்றி தகவல்கள் தெரிந்தவர்கள் 011 – 2338836 அல்லது 011 – 5668634 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.