பிரிட்டன் பார்லிமென்ட் பொதுத்தேர்தல் நிறைவு பெற்றதையடுத்து தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலைவரம்:
லேபர் கட்சி – 131
கன்சர்வேட்டிவ் கட்சி – 110
ஸ்காட்லாந்து தேசிய கட்சி – 17
பிரிட்டன் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கியது. பிரிட்டன் பார்லிமென்ட்டுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். அதன்படி கடைசியாக 2015 மே மாதம் தேர்தல் நடந்தது. பிரதமராக தெரசா மே இருந்தார். 2020 வரை பதவிக்காலம் இருந்தது.
ஆனால் இவருக்கு, பிராக்சிட் (ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு) விஷயத்தில் பார்லிமென்ட்டில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை. இதனால் தேர்தலை முன்கூட்டிய நடத்த கோரினார். அதன்படி நேற்று(ஜூன் 8) தேர்தல் நடந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
பிபிசியின் கருத்துக் கணிப்பு முடிவுகள்: