Day: June 9, 2017

சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை நீர்வழி போக்குவரத்து ?

பல்வேறு கடலோர நகரங்களை இணைத்து நீர்வழி போக்குவரத்தை தொடங்க தனி நிறுவனம் அமைக்க மத்தியக் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தமிழக அரசுடன் கைக்கோர்த்துள்ளது. இந்த நிறுவனம் சென்னை முதல் கன்னியாக்குமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களை இணைக்கும் என கூறப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் துறைமுகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவங்கி வைத்த பின் மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீர்வழி போக்குவரத்துக்காக மாநில அரசுடன் …

சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை நீர்வழி போக்குவரத்து ? Read More »

Share

பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.839 கோடியில் லேப்டாப் : தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.839 கோடியில் லேப்டாப் வழங்குவதற்காக தமிழக அரசின் எல்காட் நிறுவனம் இரண்டு சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது. இதனை எதிர்த்து ஐசிஎம்சி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை நேற்று விசாரித்த ஐகோர்ட் இது தொடர்பாக வரும் 19ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆண்டு தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழக …

பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.839 கோடியில் லேப்டாப் : தமிழக அரசுக்கு நோட்டீஸ் Read More »

Share

கத்தார் விமானங்களுக்கு சவுதி அரேபியா தடையால் மஸ்கட் ஏர்போர்ட் பிஸியானது

தீவிரவாதத்துக்கு துணை போவதாக கத்தார் நாட்டின் மீது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு, பக்ரைன் மற்றும் எகிப்து ஆகிய 4 நாடுகள் கடந்த வாரம் தடை விதித்தது. இதை ெதாடர்ந்து அந்நாட்டுக்கான விமான போக்குவரத்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார் நிறுவனமும் தனது விமான போக்குவரத்தை சவுதி அரேபியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு ரத்து செய்துள்ளது. இதனால் கத்தாரிலிருந்து சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும ஐக்கிய …

கத்தார் விமானங்களுக்கு சவுதி அரேபியா தடையால் மஸ்கட் ஏர்போர்ட் பிஸியானது Read More »

Share

பிரிட்டன் தேர்தல்: ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை இழந்தது; ஆட்சியைத் தொடர முயற்சி

பிரிட்டனில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது. ஏறக்குறைய எல்லா முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தொகுதிகள் பலவற்றை இழந்திருக்கிறது, ஆனாலும், அதுவே தனிப்பெரும் கட்சியாக இருக்கும். கன்சர்வேடிவ் கட்சி வட அயர்லாந்தின்  பல யூனியனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முயலுகிறது. இது வெற்றி பெறவில்லை என்றால் சிறுபான்மை அரசுதான் அமைக்க முடியும். இதனால் மீண்டும் விரைவிலேயே மற்றொரு தேர்தல் வரக் கூடும். “நாட்டிற்கு நிலையான …

பிரிட்டன் தேர்தல்: ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை இழந்தது; ஆட்சியைத் தொடர முயற்சி Read More »

Share

அமெரிக்க முன்னாள் உளவு இயக்குனர் சாட்சியத்தில் வெளியான 6 விஷயங்கள்

அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி, செனட் புலனாய்வுக் குழுவிடம் சாட்சியமளித்தார். சுமார் 3 மணிநேரம் நீடித்த சாட்சியத்தில், வெள்ளை மாளிகை விருந்து ஒன்றில், தமக்கு விசுவாசமாக நடந்துகொள்ளுமாறு அதிபர் கேட்டுக்கொண்டதாக அவர் சொன்னார். மேலும் அவரது சாட்சியத்திலிருந்து வெளியாகும் 6 விஷயங்கள் : 1) டிரம்ப் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் இல்லை செனட்டர் மார்கோ ரூபியோவின் கேள்வியொன்றுக்கு, கோமி அளித்த பதிலில் ‘டிரம்ப் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் இல்லை’ என்று கூறியிருக்கிறார். 2) ஜேம்ஸ் …

அமெரிக்க முன்னாள் உளவு இயக்குனர் சாட்சியத்தில் வெளியான 6 விஷயங்கள் Read More »

Share

பிரிட்டன் பொதுத்தேர்தல் : யாருக்கும் பெரும்பான்மை இல்லை என கருத்துக் கணிப்பு; தற்போது லேபர் முன்னிலை

பிரிட்டன் பார்லிமென்ட் பொதுத்தேர்தல் நிறைவு பெற்றதையடுத்து தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலைவரம்: லேபர் கட்சி – 131 கன்சர்வேட்டிவ் கட்சி – 110 ஸ்காட்லாந்து தேசிய கட்சி – 17 பிரிட்டன் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கியது. பிரிட்டன் பார்லிமென்ட்டுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். அதன்படி கடைசியாக 2015 மே …

பிரிட்டன் பொதுத்தேர்தல் : யாருக்கும் பெரும்பான்மை இல்லை என கருத்துக் கணிப்பு; தற்போது லேபர் முன்னிலை Read More »

Share

ஈரானிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

ஈரான் நாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று காலை சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும் தமிழகஅரசின் சொந்த செலவில், சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துபாயில் தங்கி மீன்பிடித்து வந்தனர். அவர்களில் 15 பேர் ஈரான் எல்லையைத் தாண்டியதாக் கூறி, அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 13 தமிழக மீனவர்களும்,   குஜராத்தைச் சேர்ந்த 2 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். …

ஈரானிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் திரும்பினர் Read More »

Share

பத்திரப்பதிவில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33% குறைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் துவங்கியது. அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில், பத்திரப்பதிவில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், ஜி.எஸ்.டி., மசோதா, மானிய கோரிக்கை மீதான விவாதம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Share

ஆதார் எண் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பிக்கவும், பான் அட்டை கோருவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தீர்ப்பளிக்கிறது. வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ என்ற பிரிவானது கடந்த மத்திய பட்ஜெட் மூலமும் 2017-நிதிச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கவும், நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் எண் …

ஆதார் எண் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு Read More »

Share

வெளிநாடு சென்ற இலங்கை தமிழ் பெண் பரிதாபமாக மரணம்

இலங்கையிலிருந்து தொழில் வாய்ப்பிற்காக சவூதி அரேபியாவிற்கு சென்ற தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரியாத்திலுள்ள இலங்கைத்தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உறவினர்களை தொடர்புகொள்வதற்கு பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. இதில் குருசாமி ஐயா ரஞ்சிதம் என்ற 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும் குறித்த பெண்ணின் தேசிய அடையாள அட்டையில் – C. 31/B வண்ணான்கேணி, பளை என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கடவுச்சீட்டில் – 66/8, புனித ஜேம்ஸ் வீதி, கொழும்பு – …

வெளிநாடு சென்ற இலங்கை தமிழ் பெண் பரிதாபமாக மரணம் Read More »

Share
Scroll to Top