Day: June 8, 2017

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி – இலங்கை vs இந்தியா : இந்தியா பேட்டிங்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா vs இலங்கை போட்டி நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா களமிறங்குகின்றனர். 3 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.

Share

ம.பி. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளை சந்திக்கச் சென்ற ராகுல் கைது

மத்திய பிரதேசம் மாண்ட்சர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தியை போலீசார் தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர். வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 1-ம் தேதி முதல் போராடி வருகின்றனர். மாண்ட்சர் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நடத்தப்பட்ட …

ம.பி. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளை சந்திக்கச் சென்ற ராகுல் கைது Read More »

Share

இயக்குனர் விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா

பிரபல நடிகர் இயக்குனர், நடன இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபுதேவா கடந்த வருடம் இயக்குனர் விஜய் இயக்கத்தில் ‘தேவி’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ஹிட் ஆகியது. ‘பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இதையடுத்து, மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் …

இயக்குனர் விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா Read More »

Share

பாகுபலி படத்தின் விளம்பரத்திற்காக பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக சீனா செல்கின்றனர்

வரும் ஜூலை மாதம் பாகுபலி 2 சீனாவில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்ய பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக சீனா செல்கின்றனர். இந்த ஜோடி ரசிகர்கள் பிடித்து போக இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக வேண்டுமென்று ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். பின் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் வதந்திகள் பரவியது. இதையடுத்து அனுஷ்கா இதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து யாரவது வதந்தி பரப்பினால் வழக்கு தொடருவேன் என எச்சரிக்கையும் …

பாகுபலி படத்தின் விளம்பரத்திற்காக பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக சீனா செல்கின்றனர் Read More »

Share

இலங்கையில் சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை விற்க தடைச் சட்டம்

சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது வென்றெடுக்கப்படும் பதக்கங்களை விற்பனை செய்ய முடியாத வகையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை அறிவித்தார். வறுமை காரணமாக தான் வென்றெடுத்த ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்யப்போவதாக பிரபல ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயசேகர ஒலிம்பிக் பதக்கம் என்பது சுசந்திக்கா ஜயசிங்கவின் …

இலங்கையில் சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை விற்க தடைச் சட்டம் Read More »

Share

ஜூலை 17-ல் ஜனாதிபதி தேர்தல்

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24 ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலை ஜூலை 17-ம் தேதி நடத்துவதாக இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி நசிம் ஜைதி இன்று அறிவித்தார்.   இத்தேர்தலுக்கான கால அட்டவணை : ஜூன் 14 – வேட்பு மனுத்தாக்கல் செய்ய தொடக்க நாள் ஜூன் 28 – வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29 – வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு நாள் ஜூலை …

ஜூலை 17-ல் ஜனாதிபதி தேர்தல் Read More »

Share
Scroll to Top