புற்றுநோயை மரபணு மாற்றம் மூலம் சரி செய்யலாம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை ‘மரபணுவை மாற்றும் முறை’ மூலம் குணப்படுத்த முடியும் என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் புற்றுநோய் போன்ற பல கொடூர நோய்களுக்கு எளிய முறையில் சிகிச்சையளிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

புற்றுநோய் உடையவர்களின் உடலில் நோய்கான உயிரணுக்களும், சாதாரண உயிரணுக்களும் தனித்தனியே வெவ்வேறு மரபணுக்களையே கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நோய்க்கு காரணமான பெரிய அளவிலான மரபணுவை மாற்றுவதன் வாயிலாகப் புற்றுநோயின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
உடலின் எந்தப் பாகத்தில் வரும் புற்றுநோயாக இருந்தாலும் அதன் முக்கிய கட்டுப்பாட்டு மண்டலமாக இருக்கக் கூடிய மரபணுவை மாற்றுவது, மேற்கொண்டு புற்றுநோய் கட்டி உருவாவதை தடுக்கும். முதற்கட்டமாக எலிகளின் மீது இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டதில், இது சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று உறுதிபடுத்தபட்டுள்ளது.
கரோலின்ஸ்கா நிறுவனத்தின் பேராசிரியரான ஜூஸ்ஸி டைபல் இதைப்பற்றிக் கூறுகையில், “சாதாரண மற்றும் புற்றுநோய் வளர்ச்சிக்கான உயிரணுக்கள் தனித்தனியே வளர்கிறது என்று நாங்கள் கண்டுபிடித்தவுடன் புற்றுநோய்க்கான மரபணுவை மட்டும் மாற்றுவது சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சிக்கு எந்த அபாயமும் விளைவிக்காததோடு, புற்றுநோயைத் தடுக்கவும் செய்யும் என்று தெரியவந்துக் கொண்டோம்” என்றார். மேலும் “இது மிகவும் குறைவான நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் புற்றுநோயின் சிகிச்சைக்கு ஒரு புதிய அணுகுமுறையைக் கொடுக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வில் மார்பக, பெருங்குடல், சிறுநீரக பை, தைராய்டு புற்றுநோய்கள் மற்றும் நாட்பட்ட லிம்போசைடிக் லுகேமியா மற்றும் மைலோமா போன்ற பல வகையான புற்றுநோய்களுக்கு இதனால் தீர்வு காணமுடியும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top