ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் பலர் காயமடைந்தனர். அங்கு நுழைந்த ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் எம்.பி.க்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்களான பார்ஸ், மெஹர் ஆகியவை முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளன. “ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு வீரரின் காலில் குண்டு பாய்ந்தது. தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடினார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஈரான் புரட்சியாளர் அயதுல்லா ருஹல்லா கொமெய்னியின் வழிபாட்டுத்தலத்திலும் ஆயுதம் ஏந்திய நபர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.