பா.ஜ.க. ஆட்சி நடந்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மன்சுர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் சுட்டதில் ஐந்து விவசாயிகள் பலியாகினர், பலர் காயமடைந்தனர். மன்சுர் மாவட்டத்தில் அதிகமாக வறட்சி நிலவுவதால், விவசாயிகள் தற்கொலைகள் இங்கு அவ்வப்போது நிகழ்ந்து வந்திருக்கிறது.
துப்பாக்கிச் சூடு நடந்ததால் கோபமடைந்த விவசாயிகள், பொலிஸ் நிலையத்தைத் தீவைத்துக் கொளுத்தியதுடன், பல பாதுகாப்பு படையினரை தாக்கினர். மாநில நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு படையினரை விரைந்து கொண்டுவந்தது. மேலும் சமூக ஊடக வதந்திகளால் வன்முறைக்கு விரோதமாக தலையிடுவதை தடுக்க இணைய சேவைகளை திரும்பப் பெற்றது.
இரண்டு தனித்தனி சம்பவங்களில் ஐந்து பேர் இறந்ததாக உள்துறை அமைச்சர் புபீந்திர சிங் தெரிவித்தார்.
“நமது நாட்டின் விவசாயிகளுடன் இந்த அரசாங்கம் போரிடுகிறது,” என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்து, ஆளும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.