Day: June 6, 2017

லண்டன் தாக்குதல்: குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன

லண்டனில் மூன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியா தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் உள்ள பாலத்தில் தீவிரவாதிகள் நடத்திய வேன் தாக்குதல் மற்றும் ஆயுதங்கள் வைத்து நடத்திய தாக்குதலில் 7-பேர் பலியாகியுள்ளனர். 48-பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்நிலையில் லண்டன் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒருவரின் பெயர் குரம் ஷசாட் பட் …

லண்டன் தாக்குதல்: குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன Read More »

Share

கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு ஓ அறிமுகம்

கூகுளின் மொபைல் இயக்க முறைமை இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட உள்ளது. தற்போது அண்ட்ராய்டு ஓ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் மாநாடு கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வருவதனை ஒட்டி ஆண்ட்ராய்டு 8.0 அல்லது ஆண்ட்ராய்டு ஓ பீட்டா நிலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதிப்பு 8ல் பல்வேறு புதிய வசதிகளுடன் முந்தைய இயங்குதளங்களுடன் ஒப்பீடுகையில் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் உள்பட ஸ்மார்ட் அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது. ஆண்ட்ராய்டு என் எனப்படும் நௌகட் இயங்குதளத்தை தொடர்ந்து வெளியாகியுள்ள …

கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு ஓ அறிமுகம் Read More »

Share

புதிய ஆய்வு: மதுபானம், ஷாம்பு, அழகு சாதன பொருட்கள் புற்றுநோயை விளைவிக்கும்

நமது உடலில் சிறிது அளவு மட்டுமே சுரக்கும் ஆல்டிஹைட் எனப்படும் ரசாயனம், இன்றைய சூழலில் நம்மைச் சுற்றியுள்ள, நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் அதிகமாகக் காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடலில் ஏற்படும் மரபணு சேதத்தைச் சரிசெய்யும் அணுக்களின் செயல்பாடானது பாதிக்கப்பட்டு, புற்றுநோயை விளைவிக்குமாம். நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களான மரசாமான்கள், அழகுசாதனங்கள், ஷாம்பு மற்றும் மதுபானங்களில் பொதுவாக காணப்படும் ரசாயனங்கள், இயற்கையாகவே நமது உடலில் சிறிது அளவு மட்டுமே இருக்க வேண்டிய ஆல்டிஹைடின் அளவை அதிகரிப்பதால் …

புதிய ஆய்வு: மதுபானம், ஷாம்பு, அழகு சாதன பொருட்கள் புற்றுநோயை விளைவிக்கும் Read More »

Share

வெங்காயத்தின் மருத்துவப் பயன்கள்

வெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும். சின்ன வெங்காயத்தை, வெவ்லம் மற்றும் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பனங்கற்கண்டைச் சேர்த்து சட்டியில் போட்டு சிவக்க வறுத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். வெங்காயத்துடன் உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். வெங்காயத்தைச் சுட்டுச் சாப்பிட்டுவந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும். வெங்காயச் …

வெங்காயத்தின் மருத்துவப் பயன்கள் Read More »

Share

ரத்தத்தை சுத்தபடுத்த வழிகள்

நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுவது ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியதுதான் ரொம்வே முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது. செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடல் சோர்வை குறைத்து ரத்தத்தை தூய்மை …

ரத்தத்தை சுத்தபடுத்த வழிகள் Read More »

Share

கத்தார் விவகாரம் குறித்த டிரம்பின் ட்வீட் : ‘தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’

‘கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’ என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என …

கத்தார் விவகாரம் குறித்த டிரம்பின் ட்வீட் : ‘தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’ Read More »

Share

ஆப்கானிஸ்தான் மசூதி அருகே குண்டு வெடிப்பு; 7 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ஹெரட் நகரில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே இன்று குண்டு வெடித்தது. இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் 15 பேர் படுகாயம் காயமடைந்தனர். 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய மசூதியான ஜமா மஸ்ஜித் அருகே உள்ள ஒரு பூங்காவில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஈரான் எல்லை அருகே உள்ள ஹெரட் நகரம் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரம் ஆகும். கடந்த புதன்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் நடந்த ஒரு வன்முறைத் தாக்குதலில் 150 க்கும் …

ஆப்கானிஸ்தான் மசூதி அருகே குண்டு வெடிப்பு; 7 பேர் பலி Read More »

Share

இண்டர்நெட் திட்டங்களுக்கு இனி ஒரு வருஷம் வேலிடிட்டி

மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று ‘தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்’ (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக ‘தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்’ (ட்ராய்) பரிந்துரைக்கும் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதை, மொபைல் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்பதே இல்லை. எனவே குறைந்த செலவில் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்பிய ட்ராய், தற்பொழுது …

இண்டர்நெட் திட்டங்களுக்கு இனி ஒரு வருஷம் வேலிடிட்டி Read More »

Share

மத்திய பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தில் போலிஸார் சுட்டு 5 பேர் பலி

பா.ஜ.க. ஆட்சி நடந்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மன்சுர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் சுட்டதில் ஐந்து விவசாயிகள் பலியாகினர், பலர் காயமடைந்தனர். மன்சுர் மாவட்டத்தில் அதிகமாக வறட்சி நிலவுவதால், விவசாயிகள் தற்கொலைகள் இங்கு அவ்வப்போது நிகழ்ந்து வந்திருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடந்ததால் கோபமடைந்த விவசாயிகள், பொலிஸ் நிலையத்தைத் தீவைத்துக் கொளுத்தியதுடன், பல பாதுகாப்பு படையினரை தாக்கினர். மாநில நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு படையினரை விரைந்து கொண்டுவந்தது. மேலும் சமூக ஊடக வதந்திகளால் வன்முறைக்கு விரோதமாக …

மத்திய பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தில் போலிஸார் சுட்டு 5 பேர் பலி Read More »

Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் காலமானார்

நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், திமுகவின் துவக்க கால உறுப்பினரும், அவசரநிலைச் சட்டத்திற்கு எதிராக போராடியவருமான இரா.செழியன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் இளைய சகோதரரான இரா.செழியன், மாணவ பருவத்தில் திராவிடர் கழக பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டவர். பின்னர் திமுகவில் சேர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டார். அவர் சிறந்த நாடாளுமன்றவாதி, நேர்மையான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர்.  

Share
Scroll to Top