லண்டன் பாலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில், ஏழு பேர் கொல்லப்பட்டனர்; பயங்கரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்குப் பிறகு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகளின் கூட்டத்துக்குள் புகுந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது.
மூன்று தாக்குதல்தாரிகளில் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பின்னர் பார்கிங், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் பகுதிக்குள் கத்திகளுடன் ஓடி பலரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை கண்டித்துள்ள பிரதமர் தெரீசா மே “இதுவரை நடந்தது போதும் என்று கூறும் நேரமிது” என்று கூறியுள்ளார்.
7 பேரை பலிகொண்ட லண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக, அந்த அமைப்புடன் தொடர்புடைய இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.