Day: June 5, 2017

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு முடிவு

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த 145 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறை பிடிக்கப்பட்ட 143 படகுகளும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசிடம் உள்ளது. சிறை பிடிக்கப்பட்டுள்ள 143 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். படகுகளை விடுவிக்க மத்திய அரசு இலங்கை அரசுக்கு கோரிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இன்று தமிழக அரசுக்கு சொந்தமான …

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு முடிவு Read More »

Share

இந்தியாவின் சக்திவாய்ந்த ராக்கெட் ஜிஎஸ்எல்வி-MkIII செயற்கைகோள் ஜிசாட் – 19 ஐ விண்ணில் செலுத்தியது

ஜி.சாட்-19 (GSAT-19) செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. Mk III ராக்கெட் (GSLV Mk III), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. “ராட்சத ராக்கெட்” என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். ஏறக்குறைய 400 கோடி ரூபாய் செலவில் இந்தியா தயாரித்த, அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே இந்த …

இந்தியாவின் சக்திவாய்ந்த ராக்கெட் ஜிஎஸ்எல்வி-MkIII செயற்கைகோள் ஜிசாட் – 19 ஐ விண்ணில் செலுத்தியது Read More »

Share

கத்தாருடன் தொடர்புகளை துண்டித்த அண்டை நாடுகள்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு உள்பட தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக கத்தார் மீது குற்றஞ்சாட்டி, சௌதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஏமன் ஆகிய நாடுகளும் தங்களுடைய ராஜீய தொடர்புகளை துண்டித்துள்ளன. சிறிய தீபகற்பமான கத்தாரோடு நிலம், கடல் மற்றும் வான்வழிகளில் செயல்படும் தொடர்புகளை ரியாத் மூடியுள்ளதாக சௌதி அரசு செய்தி நிறுவனம் (எஸ்பிஎ) தெரிவித்திருக்கிறது. இதனை ‘நேர்மையற்ற’ முடிவு என்று குறிப்பிட்டிருக்கும் கத்தார், இதற்கு ‘எந்த அடிப்படையும் இல்லை’ …

கத்தாருடன் தொடர்புகளை துண்டித்த அண்டை நாடுகள் Read More »

Share

தினகரன் குடும்பத்தார் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் : ஜெயக்குமார்

தினகரனும் அவரைச் சார்ந்தவர்களும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவுக்கு சசிகலாவை சந்திக்கச் சென்ற தினகரன் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை தான் தொடர இருப்பதாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள், முதலமைச்சரையும் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆலோசனை குறித்த விவரங்களை தெரிவித்த ஜெயக்குமார்  கூறியதாவது : கட்சியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் என்ற கூறிய தினகரன் அந்த உறுதியோடு இருக்க …

தினகரன் குடும்பத்தார் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் : ஜெயக்குமார் Read More »

Share

இந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

இஸ்ரோ நிறுவனம் உருவாக்கிய, இந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட, அதிக எடை தாங்கும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுண் நேற்று தொங்கியது. மேலும், ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ள நேரத்தில், வானிலை நிலவரம், காலநிலை மாறுபாடு எவ்வாறு இருக்கும் என்பதையும் கண்காணித்து வருகின்றனர். இஸ்ரோ தலைவர் …

இந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது Read More »

Share

மணிலா தாக்குதல் ஐ.எஸ். அமைப்பின் வேலையல்ல : பிலிப்பின்ஸ் அதிபர்

மணிலா சூதாட்டக்கூடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பின் வேலையல்ல என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடார்ட்டே தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து ரெசார்ட்ஸ் வேர்ல்ட் மணிலா என்னும் அந்த சூதாட்ட விடுதியில் 40 பேர் இறந்தனர்.  முன்னதாக அந்தத் தாக்குதலுக்கு ஐ எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடச் செல்லவிருப்பதாகத் தெரிவித்த திரு. டுடார்ட்டே, அது ஐ. எஸ். …

மணிலா தாக்குதல் ஐ.எஸ். அமைப்பின் வேலையல்ல : பிலிப்பின்ஸ் அதிபர் Read More »

Share

லண்டன் பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் பலி : 12 பேர் கைது

லண்டன் பாலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில், ஏழு பேர் கொல்லப்பட்டனர்; பயங்கரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதலுக்குப் பிறகு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகளின் கூட்டத்துக்குள் புகுந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று தாக்குதல்தாரிகளில் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பின்னர் பார்கிங், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் …

லண்டன் பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் பலி : 12 பேர் கைது Read More »

Share

ஐசிசி சாம்பியன் டிரோபி : பாகிஸ்தானை வென்றது இந்தியா

ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட்டில், பாகிஸ்தானை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 48 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 319 ரன்கள் குவித்தது. இறுதி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர் விளாசினார் பாண்டியா. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 9வது ஓவரில் ஷெஸாதை 12 ரன்களுக்கு இழந்தது. 33.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் …

ஐசிசி சாம்பியன் டிரோபி : பாகிஸ்தானை வென்றது இந்தியா Read More »

Share

புத்தக கையேடு பதிவு பற்றி காங்கிரஸ் மீது வெங்கையா பாய்ச்சல்

ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என புத்தக கையேட்டில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி மீது மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாட்டின் வரைபடம் அடங்கிய ஒரு புத்தக கையேட்டை காங்கிரஸ் கட்சி நேற்று(ஜூன்3) வெளியிட்டது. ராஷ்டீரிய சுரக்ஷா பர் ஆன்ச் என்ற தலைப்பிலான அந்த புத்தகம் 16 பக்கங்களை கொண்டது. அதில் 12வது பக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதனையும் இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என குறிப்பிட்டுள்ளது.இதுகுறித்து பேசிய மத்திய தகவல் …

புத்தக கையேடு பதிவு பற்றி காங்கிரஸ் மீது வெங்கையா பாய்ச்சல் Read More »

Share
Scroll to Top