புரட்சிகருத்துகளை கூறுவதாக சினிமாபடம் எடுத்த 60 வயது இயக்குனர் வேலுபிரபாகரன் தனது படத்தில் நடித்த 35 வயது நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடவுள் மறுப்பு கொள்கை உடையவர் என்று கூறிக் கொள்ளும் இவர் நாளைய மனிதன், அதிசயமனிதன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகவும், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கி அனல் பறக்கும் வசனங்களை பேசி நடித்தவர். கடந்த சிலவருடங்களுக்கு முன்பு காதல் கதை என்ற வயது வந்தோருக்கான படத்தை தயாரித்து இயக்கினார் வேலுபிரபாகரன். உலகில் காதல் என்று எதுவுமே கிடையாது எல்லாமே உடல் சார்ந்த இனக்கவர்ச்சி மட்டுமே என்றும் அவர் கூறி வந்தார்.
இந்த நிலையில் தான் இயக்கிய காதல் கதை படத்தில் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நடித்த ஷெர்லி என்ற நடிகையை தற்போது காதலிப்பதாக கூறி இன்று மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார் வேலு பிரபாகரன்.