கடந்த ஆணடு முதல் 2017 பிப்ரவரி வரை நாடு முழுவதும் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனைகளில் கிடைத்த கணக்கில் வராத பண விவகாரத்தில் வட மாநில நகரங்களை விட தென் மாநில நகரங்களே முன்னணியில் உள்ளன. இந்த விஷயத்தில் சென்னைக்கு, இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.
கடந்த, 2016 முதல், நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, வருமான வரித்துறை பல்வேறு நகரங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. அதில், 14 நகரங்களின் விவரங்கள் மட்டும் தற்போது கிடைத்துள்ளன. அதில், முதல் இடத்தில் பெங்களூரு உள்ளது.
கடந்த, 2016ல் சென்னையில், 17 சோதனைகள் நடத்தப்பட்டன. 93.84 கோடி ரூபாய் சிக்கியது. கணக்கில் வராத, 1,330.65 கோடி ரூபாய் குறித்த ஆவணங்கள் சிக்கின.
2017 ல், 99 சோதனைகள் நடத்தப்பட்டன. 429.74 கோடி ரூபாய் சிக்கியது. கணக்கில் வராத, 3,327.66 கோடி ரூபாய் குறித்த ஆவணங்கள் சிக்கின. இந்த விஷயத்தில், மும்பை மற்றும் டில்லி நகரங்கள் பின்தங்கிய நிலையில் தான் உள்ளன.
தென் மாநில நகரங்களில் கணக்கில் வராத பணம் இருப்பதை ஒப்புக் கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள், அரசியல்வாதிகள் அல்லது அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களாகவே உள்ளனர் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.