வட கொரியா இவ்வாண்டு நடத்திய தொடர் ஏவுகணை சோதனைகளுக்கு எதிரான நடவடிக்கையாக, அந்நாட்டின் மீதான தடையை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை விரிவாக்கியுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
வட கொரிய தலைவரின் வெளிநாட்டு உளவுத்துறை நடவடிக்கைகள், பயணத்தடை, நான்கு நிறுவனங்கள் மற்றும் 14 அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கம் ஆகிய அம்சங்கள் இந்த தடையில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கா மற்றும் சீனா மேற்கொண்ட பல வார பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் விதிக்கப்படும் இத்தடைகள், ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெள்ளியன்று நடைபெற்ற 15 உறுப்பு நாடுகளின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் இந்த தடை விதிக்கும் தீர்மானம் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.