மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, தமிழகத்தின் கூடங்குளம் அணு உலையில் மேலும் இரண்டு கூடுதல் அலகுகளை அமைப்பதற்கான உடன்பாடு, இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கிடையே இன்று கையெழுத்தானது.
ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. மேலும் இரு “பெரும் சக்திகளுக்கு” இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான “புதிய வழியை” கொடுக்க இரு தரப்பினரும் முடிவு செய்தனர். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியபோது, புதிய அணுஉலைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது இந்திய, ரஷ்ய உறவை மேலும் வலுப்படுத்தி யுள்ளது என்று தெரிவித்தார்.