அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை திரும்பப் பெற வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் மற்றும் இதைத் திரும்பப் பெறுதலினால் என்ன நடக்கும் என்பது பற்றி சில தகவல்கள் கீழே காணலாம் :
பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் என்றால் என்ன?
ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அமெரிக்கா உட்பட ஏறக்குறைய 200 நாடுகள், 2015 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட தங்கள் பசுமை இல்ல வாயு உமிழ்வை தானாக குறைப்பதற்கு ஒப்புக்கொண்டன. ஒவ்வொரு நாடுகளும் தங்கள் உமிழ்வு இலக்குகளை தாங்களாகவே அமைத்துக்கொள்ளலாம். எனினும், இந்த இலக்குகள் அவர்களை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது.
அமெரிக்கா என்ன உறுதியளித்தது?
அமெரிக்கா தனது வருடாந்திர பசுமைக்குடில் வாயு உமிழ்வை 2025 – ஆம் ஆண்டில் 2005 -ல் இருந்ததைக் காட்டிலும் 26 முதல் 28 சதவிகிதம் குறைக்க உறுதியளித்தது. இதனால் 1.6 பில்லியன் டன் வருடாந்திர பசுமைக்குடில் வாயு உமிழ்வுகள் குறைக்கப்படும்.
உலக அளவில் கார்பன் வாயு உமிழ்வில் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், சைனா முதலிடத்திலும் இருக்கின்றன.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் எவை ?
நிகாரகுவா மற்றும் சிரியா. காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. மாநாட்டில் பங்கேற்ற 197 நாடுகளில், இவ்விரு நாடுகளும் கையெழுத்திடவில்லை.
இதில் டிரம்பின் நிலைப்பாடு என்ன ?
காலநிலை மாற்றம் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு சீனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு “ஏமாற்றுவித்தை” என்று பதவி ஏற்பதற்கு முன்னதாக டிரம்ப் கூறியுள்ளார். பரந்த விஞ்ஞான ஒத்துழைப்பை மீறியதாக இந்த வலியுறுத்தல் உள்ளது. டிரம்பின் கடந்த வார வெளிநாட்டு பயணத்தின் போது, ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா இவ்வுடன்படிக்கையில் தொடரவேண்டும் என வலியுறுத்தினர். இத்தாலியில் நடந்த G-7 உச்சி மாநாட்டின் போது, மற்ற G-7 உறுப்பினர் நாடுகளுக்கு இதுகுறித்து டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.
“அடுத்த சில நாட்களில் பாரிஸ் உடன்படிக்கையில் என் முடிவை நான் அறிவிப்பேன்,” என டிரம்ப் புதன்கிழமை ட்வீட் செய்தார்.
அமெரிக்கா பின்வாங்கினால் என்ன அர்த்தம்?
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை நிராகரிப்பதனால் உலகின் தொழில்மயமான பொருளாதாரங்களில் ரஷ்யா மட்டுமே அமெரிக்காவுடன் இணக்கமாக காணக்கூடிய நிலை ஏற்படும் .