மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது சென்ற அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் 7.0 சதவீத வளர்ச்சியைவிட குறைந்துள்ளது. இதற்கு சென்ற ஆண்டு நவம்பரில் துவக்கப்பட்ட பணமதிப்பு நீக்கமே முக்கிய காரணமாயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா இழந்துவிட்டது.
இருப்பினும், 2016-17 நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.1 சதவீதமாக மாறாமல் இருந்தது. இதன் மதிப்பு 7.6 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப் பட்டிருந்தது.
நான்காவது காலாண்டில் நிதி சேவைகள் துறை ஒற்றை இலக்க வேகத்தில் வளர்ச்சியுற்ற நிலையில், கட்டுமானத் துறை ஒரு பெரும் சுருக்கத்தை பிரதிபலித்தது.