Day: June 1, 2017

கோரிக்கைக்களுக்கு ஒத்துழைத்தால் இரு அணிகளும் இணைவதில் நிபந்தனைகள் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கம்பத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது : கடந்த 45 ஆண்டுகளாக அ.தி.மு.க.வை தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பாதுகாத்து வந்தனர். எந்தவொரு தனிக்குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் கட்சி சென்றுவிடக்கூடாது என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர்களின் அந்த நோக்கத்தை பின்பற்றியே நானும் எனது ஆதரவாளர்களும் செயல்பட்டு வருகிறோம். மேலும் அ.தி.மு.க. எந்தவொரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே தர்மயுத்தத்தையும் தொடங்கினோம். எங்களின் நோக்கத்து சசிகலா அணியினர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் இரு அணிகளும் …

கோரிக்கைக்களுக்கு ஒத்துழைத்தால் இரு அணிகளும் இணைவதில் நிபந்தனைகள் இல்லை: ஓ.பன்னீர்செல்வம் Read More »

Share

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிவை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை திரும்பப் பெற வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மற்றும் இதைத் திரும்பப் பெறுதலினால் என்ன நடக்கும் என்பது பற்றி  சில  தகவல்கள் கீழே காணலாம் : பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் என்றால் என்ன? ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அமெரிக்கா உட்பட ஏறக்குறைய 200 நாடுகள், 2015 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட தங்கள் பசுமை இல்ல …

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிவை Read More »

Share

ஜனவரி முதல் மார்ச் வரை இந்திய பொருளாதார வளர்ச்சி 6% ஆனது

மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது சென்ற  அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் 7.0 சதவீத வளர்ச்சியைவிட குறைந்துள்ளது. இதற்கு சென்ற ஆண்டு நவம்பரில் துவக்கப்பட்ட பணமதிப்பு நீக்கமே முக்கிய காரணமாயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இதனால் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா இழந்துவிட்டது. இருப்பினும், 2016-17 நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.1 சதவீதமாக …

ஜனவரி முதல் மார்ச் வரை இந்திய பொருளாதார வளர்ச்சி 6% ஆனது Read More »

Share
Scroll to Top