Month: June 2017

புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தொடங்கி வைத்தனர். நம் நாட்டில் தற்போது இருக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி என்ற பல்வேறு விதமான மறைமுக வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற புதிய ஜி.எஸ்.டி. வரி  மத்திய அரசு முடிவு செய்தபடி, ஜூலை 1-ந் தேதி (இன்று) முதல் நாடு …

புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர் Read More »

Share

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் நிச்சயமாக இறந்து விட்டார் : ஈரானிய ஊடகங்கள்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி நிச்சயமாக இறந்துவிட்டார் என்று மூத்த தலைவர் அயத்துல்லா கொமேனி உறுதியாகக் கூறியுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. இராக்கின் அரசு பாதுகாப்புப் படை அதிகாரிகள் பலரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஈரானின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிரியாவின் ராக்கா அருகே கடந்த மாதம் 28-ம் தேதி ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் அவர்கள் குழுமியிருந்த பகுதியில் …

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் நிச்சயமாக இறந்து விட்டார் : ஈரானிய ஊடகங்கள் Read More »

Share

அமெரிக்காவில் டிரம்பின் பயணத்தடை அமலுக்கு வருகிறது

அமெரிக்க அதிபர் டிரம்பின் நிறைவேற்று அதிகாரத்தில் வெளியிடப்பட்ட பயணத்தடையில், உச்ச நீதிமன்றம் அனுமதித்த பகுதிகள் இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது. பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற 6 நாடுகளின் பிரஜைகளுக்கும், அகதிகளுக்கும் புதிய விசா வரையறை பின்பற்றப்படும். இந்த நாடுகளை சேர்ந்தோரும், அகதிகளும் இனிமேல் அமெரிக்கா விசா பெறுவதற்கு, அமெரிக்காவோடு நெருங்கிய குடும்ப அல்லது வர்த்தகத் தொடர்புகள் கொண்டவராக இருக்க வேண்டும் என்று இந்த புதிய வரையறை வலியுறுத்துகிறது. இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாட்டு மக்களை …

அமெரிக்காவில் டிரம்பின் பயணத்தடை அமலுக்கு வருகிறது Read More »

Share

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. : வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு; பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பு என்கிறார் ஸ்டாலின்

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாளை மாநிலம் முழுவதும் கடையடைப்பில் ஈடுபடுகிறார்கள். மேலும், தமிழகத்தில் அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஒரே நாடு ஒரே வரி” என்று வம்படியாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அவசர அவசரமாக மத்திய அரசு கொண்டு வருவது ஒருபுறமிருக்க, அதை விட வேகமாக அ.தி.மு.க. அரசு இந்த …

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. : வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு; பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பு என்கிறார் ஸ்டாலின் Read More »

Share

ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர்

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வது தவறு என்று பிரதமர் மோடி கூறிய சில மணி நேரங்களில், ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள், மாட்டுக்கறி வைத்திருந்தார் என ஒரு முஸ்லிமை கொடுமையாகத் தாக்கிக் கொன்றுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில்  42 வயது ஆன அலிமுத்தீன் இல்யாஸ் அஸ்கர் அலி என்பவர் பசு பாதுகாப்பு தீவிரவாதிகளால் தாக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாருதி வேன் ஒன்றில் அஸ்கர் உட்பட மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். …

ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர் Read More »

Share

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்

மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங், பீகாரில் பொது இடத்தில்  சிறுநீர் கழித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக இருப்பவர் ராதா மோகன்சிங். சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பதை யாரோ ஒரு மர்ம நபர் மறைந்து இருந்து படம் பிடித்தார். அந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிலும் அந்த காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அமைச்சர் ராதாமோகன், பிபாரா …

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர் Read More »

Share

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கமுடியாது : மோடி

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குஜராத்தில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திஜியின் குருவான ஷ்ர்மத் ராஜ் சந்திராஜி அவர்களின் 150-வது பிறந்த தினத்தில் கலந்து கொண்டு பேசும் போது,  பசுப் பாதுகாவலர்களுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் வன்முறையைப் பின்பற்றுவது மகாத்மாவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றார். நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பவர்கள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு செல்பவர்களை, பசுக் காவலர்கள் தாக்கும் …

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கமுடியாது : மோடி Read More »

Share

‘வெற்றி பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள்’ பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த்

சமீபத்தில் நடந்த இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ், ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டி ஆகியவற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அடுத்தடுத்து 2 பட்டங்களை வென்ற ஸ்ரீகாந்த் மற்றும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் பிரனாய், சாய் பிரனீத் ஆகியோர் நேற்று ஐதராபாத் திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் உலக தர வரிசையில் 11-வது இடத்துக்கு முன்னேறி இருக்கும் …

‘வெற்றி பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள்’ பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் Read More »

Share

வத்திக்கான் கார்டினல்மீது பல்வேறு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள்

ஆஸ்திரேலியாவைச் சார்ந்த  மூத்த கத்தோலிக்க கார்டினல் மீது பலவேறு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண போலிசார் வியாழனன்று தெரிவித்துள்ளனர். போப் பிரான்சிஸின் தலைமை நிதி ஆலோசகரான கார்டினல் ஜார்ஜ் பெல், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டகளுக்கு இப்போது ஆளாகியுள்ளார். இவர் போப்பிற்குப் பின்னால் வத்திக்கானில் மூன்றாவது மிக சக்தி வாய்ந்த நபராவார். இதுவரை கத்தோலிக்க திருச்சபையில் இவ்வளவு உயர்ந்த தரவரிசையில் உள்ள வத்திக்கான் அதிகாரி பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டகளுக்கு ஆளானதில்லை. விக்டோரியா மாநில பொலிஸ் …

வத்திக்கான் கார்டினல்மீது பல்வேறு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் Read More »

Share

இலங்கையில் பணி புறக்கணிப்பு போராட்டம்: தபால் சேவை முடக்கம்

இலங்கையில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணி புறக்கணிப்பு போராட்டத்தினால் தபால் சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஐந்து லட்சத்திட்கும் மேற்பட்ட தபால்கள் மற்றும் பொதிகள் விநியோகிக்க முடியாமல் தேங்கியுள்ளன. தபால் திணைக்களத்தின் தொழிற்சங்க ஒன்றியத்தின் செயலாளர் சிந்தக்க பண்டார இதனை தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக தபால் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, 653 தபால் காரியாலயங்கள் மற்றும் 3,410 கிளை தபால் அலுவலகங்களின் சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Scroll to Top