ஐஸ்லாந்தில் நடைப்பெற்று வரும் உலகக்கோப்பை வாள்வீச்சு (Fencing) போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட, தமிழ்நாட்டின் சி.ஏ.பவானிதேவி தங்கப்பதக்கம் வென்று உள்ளார். சர்வதேச அளவில் வாள்வீச்சு போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
அரையிறுதிப்போட்டியில் சி.ஏ.பவானிதேவி பிரிட்டன் நாட்டு வீராங்கனை ஜெஸிகா கார்பை எதிர்கொண்டார். இதில் 15-11 என்ற புள்ளிகணக்கில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியிலும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த சாரா ஜென் ஹம்ப்சன் வீராங்கனையை எதிர் கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் 15-13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் சர்வதேச அளவில் வாள்வீச்சு (Fencing)போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.