நடிகை அனுஷ்காவிற்கு ஏற்பட்டுள்ள திருமண தோஷம் நீங்குவதற்காக கோயிலில் விசேஷ பூஜை செய்யப்பட்டது.
நடிகை அனுஷ்கா 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். தற்போதுவரை சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 35 வயது ஆகிறது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. அனுஷ்காவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தும், இன்னும் திருமணம் முடிவாகவில்லை.
அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதனாலேயே திருமணம் கைகூடாமல் தள்ளிப்போகிறது என்றும் ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருமண தடை நீங்க, அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். இந்த கோவிலுக்கு அனுஷ்கா வருவதை ரகசியமாக வைத்து இருந்தனர்.
அனுஷ்காவுடன் தாயார் பிரபுல்லா ராஜ் ஷெட்டி, சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி ஆகியோரும் சென்று இருந்தனர். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மங்களூரில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றும் திருமண தடை நீங்க பூஜை செய்ததாக கூறப்படுகிறது.