Day: May 28, 2017

வாள்வீச்சு உலகக்கோப்பையில் முதன்முதலாக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை

ஐஸ்லாந்தில் நடைப்பெற்று வரும் உலகக்கோப்பை வாள்வீச்சு (Fencing) போட்டியில்  இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட, தமிழ்நாட்டின் சி.ஏ.பவானிதேவி தங்கப்பதக்கம் வென்று  உள்ளார். சர்வதேச அளவில்  வாள்வீச்சு போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். அரையிறுதிப்போட்டியில் சி.ஏ.பவானிதேவி பிரிட்டன் நாட்டு வீராங்கனை ஜெஸிகா கார்பை எதிர்கொண்டார். இதில் 15-11 என்ற புள்ளிகணக்கில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியிலும்  பிரிட்டன் நாட்டை சேர்ந்த சாரா ஜென் ஹம்ப்சன் வீராங்கனையை எதிர் கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் 15-13 …

வாள்வீச்சு உலகக்கோப்பையில் முதன்முதலாக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை Read More »

Share

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் நியுசிலாந்தை வென்றது இந்தியா

இந்தியா-நியூசிலாந்து இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 190 ரன் இலக்கை நோக்கி இந்தியா ஆடியது. 26 ஓவர்களில் முடிவில் மழை குறுக்கிட்டது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. 26 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 129 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டதால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 45 …

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் நியுசிலாந்தை வென்றது இந்தியா Read More »

Share

யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் : காங்கிரஸ்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில், தலித் குடும்பத்தினருக்கு சோப்பு வழங்கிய விவகாரத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த சமுதாயத்திடம் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், அவர் மீது வழக்கு பதிவு ெசய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், குஷிநகர் மாவட்டம் மனிப்பூர் தீனாபட்டி கிராமத்துக்கு கடந்த வியாழக்கிழமையன்று சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் முஷார் தலித் குடும்பத்தினரை அவர் சந்தித்தார். ஆனால், அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது முன்னதாக முஷார் தலித் குடும்பத்தினரிடம் சோப்பு மற்றும் ஷாம்பூ வழங்கிய  அதிகாரிகள் கூட்டத்துக்கு பங்கேற்க வருவதற்கு முன்பு குளித்து விட்டு வர வேண்டும் என தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து, அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலித் குடும்பத்தினருக்கு சோப்பு வழங்கிய விவகாரத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். குறைந்த பட்ச தீண்டாமை நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாஜ தலைவர்கள் அந்த கிராமத்தின் அனைத்து சமுதாய மக்களையும் அவமானப்படுத்தி விட்டனர். இது அதிர்ச்சியான தீண்டாமை செயல். இவ்வாறு அவர் கூறினார்.

Share

வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்” – சாணக்கியர்

Share

இலங்கை: கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-யை தொட்டது

இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு பகுதி  மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி  91 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-யை தொட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   200 க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண …

இலங்கை: கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-யை தொட்டது Read More »

Share

மோடியின் மாடு விற்பனை தடையை எதிர்த்து கேரளாவின் பல இடங்களில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம்

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, கேரளா முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெற்றது. முஸ்லீம் மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பெருமளவு மக்களால், மாட்டுக்கறி உண்ணப்படுகிறது. விலை மலிவு என்பதோடு, அதிக சத்தானபொருள் என்பதால், இதனை அடித்தட்டு மக்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களும் உண்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென மாடுகளை இறைச்சிக்காக விற்கவும், கொல்லவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு …

மோடியின் மாடு விற்பனை தடையை எதிர்த்து கேரளாவின் பல இடங்களில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் Read More »

Share
Scroll to Top