வெள்ளிக்கிழமை (இன்று) கெய்ரோவிற்கு தெற்கே காப்டிக் கிறிஸ்தவர்கள் பயணித்துக் கொண்டிருந்த பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டதுடன் 25 பேர் காயமடைந்தனர் என்று எகிப்திய அரச தொலைக்காட்சி தெரிவித்தது.
எந்தவொரு பயங்கரவாத குழுவும் தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் எகிப்திய காப்டிக் கிரிஸ்துவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விருப்பமான இலக்காக இருக்கின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில், ஐஸிஸ் அமைப்பு வெளியிட்ட ஒரு காணொளியில் “எகிப்திய கிறிஸ்தவர்கள் தங்களுக்கு பிடித்த இரை” என்று கூறியிருந்தனர். டிசம்பர் மாதத்தில் கெய்ரோ தேவாலயத்தில் ஒரு 30 பேரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரின் படத்தை இந்த வீடியோ காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.