“அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்கபட வேண்டும் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. சத்தமாகப் பேசி மறுப்பு தெரிவிப்பவர்களின் குரலை மூழ்கடிக்கக் கூடாது” என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.
புது டில்லியில், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அழைப்பின் பேரில் இரண்டாம் ராம்நாத் கோயங்கா விரிவுரையை வழங்குகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்கபட வேண்டியது நமது நாட்டைக் காப்பாற்றுவதற்கான அடிப்படையும் உண்மையான ஜனநாயக சமூகத்தின் இயல்புமாகும். ஜனநாயக அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் கேள்விகளைக் கேட்பது நல்லது, ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது என்பதை உணர வேண்டும் என்றும் கூறினார்.