Day: May 26, 2017

எகிப்தில் தாக்குதல் : காப்டிக் கிறிஸ்தவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்சில் துப்பாக்கிதாரிகள் சுட்டு 23 பேர் பலி

வெள்ளிக்கிழமை (இன்று) கெய்ரோவிற்கு தெற்கே காப்டிக் கிறிஸ்தவர்கள்  பயணித்துக் கொண்டிருந்த  பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டதுடன்  25 பேர் காயமடைந்தனர் என்று எகிப்திய அரச தொலைக்காட்சி தெரிவித்தது. எந்தவொரு பயங்கரவாத குழுவும் தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் எகிப்திய காப்டிக் கிரிஸ்துவர்கள்  ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின்  விருப்பமான இலக்காக இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில், ஐஸிஸ் அமைப்பு வெளியிட்ட ஒரு காணொளியில்  “எகிப்திய கிறிஸ்தவர்கள்  தங்களுக்கு பிடித்த இரை” என்று கூறியிருந்தனர். டிசம்பர் …

எகிப்தில் தாக்குதல் : காப்டிக் கிறிஸ்தவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்சில் துப்பாக்கிதாரிகள் சுட்டு 23 பேர் பலி Read More »

Share

தனியார் பாலில் கலப்படம் : அமைச்சர் புகார்

தனியார் பால் உற்பத்தியாளர்கள், பால் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைப்பதற்காக, உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனத்தைப் பயன்படுத்துவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். அவ்வாறு நடப்பதாக இருந்தால், நடவடிக்கை எடுப்பதை விடுத்து, ஊடகங்கள் மூலம் ஊதிப் பெரிதாக்கி, மக்களிடையே பீதியைக் கிளப்புவதுதான் அமைச்சரின் வேலையா என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன. ஆவின் பால் நிறுவனம் சிறப்பாக செயல்படுவது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்களைப்பற்றி குறை கூறினார். தலைநகர் …

தனியார் பாலில் கலப்படம் : அமைச்சர் புகார் Read More »

Share

அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்கபட வேண்டும் : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

“அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்கபட வேண்டும் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. சத்தமாகப் பேசி மறுப்பு தெரிவிப்பவர்களின் குரலை மூழ்கடிக்கக் கூடாது”  என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார். புது டில்லியில், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அழைப்பின் பேரில் இரண்டாம் ராம்நாத் கோயங்கா விரிவுரையை வழங்குகையில் இவ்வாறு தெரிவித்தார். அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்கபட வேண்டியது நமது நாட்டைக் காப்பாற்றுவதற்கான அடிப்படையும் உண்மையான ஜனநாயக சமூகத்தின் இயல்புமாகும். ஜனநாயக அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் கேள்விகளைக் கேட்பது நல்லது, ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு …

அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்கபட வேண்டும் : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி Read More »

Share
Scroll to Top