Day: May 25, 2017

இனவாதத்தை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : ரணில் விக்கிரமசிங்க

அண்மைய தினங்களில் நாட்டின் சில பகுதிகளில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ள பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க “இனவாதத்தை தூண்டும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று போலீசாரிடம் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க சிலர் மீண்டும் நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மீண்டும் எமது நாட்டில் யுத்தமொன்று ஏற்பட இடமளிக்க முடியாதென்று கூறிய விக்ரமசிங்க, இனவாத செயல்கள் காரணமாக நாட்டின் அபிவிருத்தி இலக்குகள் பின்னடைவு காணும் அபாயம் இருப்பதாகவும் …

இனவாதத்தை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : ரணில் விக்கிரமசிங்க Read More »

Share

வைகோ ஜாமீனில் விடுதலை

தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று வியாழக்கிழமை காலை சிறையிலிருந்து வெளிவந்தார். பழிவாங்கும் நோக்கத்திற்காகவே தன் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியாகியிருக்கும் வைகோ குற்றம்சாட்டினார். மேலும் தனது கட்சியின் நிர்வாகிகள் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் தான் தற்போது ஜாமீன் பெற ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார். முன்னதாக வைகோவின் ஜாமீன் கோரும் மனு, நேற்று புதன்கிழமை சென்னை 4 ஆவது அமர்வு நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் …

வைகோ ஜாமீனில் விடுதலை Read More »

Share

மகாராஷ்ட்ரா : முதல்வர் பட்நாவிஸ் சென்ற விமானம் விபத்து; மயிரிழையில் உயிர் தப்பினார்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பயணம்செய்த ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில்  முதல்வர் பட்நாவிஸ் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர். மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று லத்தூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். லத்தூர் அருகே சென்றபோது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது.  முதல்வருடன் ஐந்துபேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய  அனைவரும் காயங்களின்றி உயிர்பிழைத்துள்ளனர். பின்னர் …

மகாராஷ்ட்ரா : முதல்வர் பட்நாவிஸ் சென்ற விமானம் விபத்து; மயிரிழையில் உயிர் தப்பினார் Read More »

Share

“ஸ்டாப் இட்” : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்  கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் பல்வேறு மொழிகளில்  தேர்வு நடந்தது. சில மாணவர்களின் மனுக்களின் அடிப்படையில், நீதிபதி எம்.வி. முரளிதரன் இந்த இடைக்காலத் தடையை பிறப்பித்தார். மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) அதிகாரிகள் மற்றும் மத்திய மேல்நிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) இயக்குனர் ஆகியோர் …

“ஸ்டாப் இட்” : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை Read More »

Share
Scroll to Top