இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டித் போட்டித்தொடரில்,  இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து கலந்து கொண்ட மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. 19 வயதான தீப்தி சர்மா அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சிறப்பாக மட்டை வீசினார்.

முதல் விக்கெட்டாக களம் இறங்கிய தீப்தி ஷர்மாவும், பூனம் ராவத்தும் புதிய சாதனையை நிகழ்த்தினார்கள். இருவரும் இணைந்து 320 ரன்களை குவித்தனர். தீப்தி 188 ரன்களும், பூனம் 109 ரன்களும் எடுத்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, ஐசிசி பெண்கள் உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்திய அணி தகுதிபெற்றது.

அதைத் தொடர்ந்து சில வாரங்களில் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை என்ற சிறப்[பை ஜூலன் கோஸ்வாமி பெற்றார். அதன்பிறகு, ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தீப்தியும், பூனமும் புதிய சாதனையை நிகழ்த்தினார்கள்.

என்னைப் போன்ற இளைஞிகள் தற்போது கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுவருகிறோம். இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் தொடர்ந்து சாதனை செய்வது அணியின் மனோபலத்தை அதிகரித்திருப்பதாக கூறும் தீப்தி, இந்த உத்வேகத்தை உலகக்கோப்பையாக மாற்றுவோம் என்கிறார்.

கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இந்திய ஆண்கள் அணி அந்த நிலைமையை மாற்றுவதில் வெற்றிபெற்றது.

இனி இந்திய பெண்கள் அணி, ஆடவர் அணியைப் போல் தனக்கென கிரிக்கெட்டில் ஒரு சிறந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக முடியும் என்கிறார் பூனம்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top