பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராந்தெயின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை பிரிட்டன் நேரம் 22.35க்கு இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக போலீசார் கருதும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது மனம் வருந்துவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்தார்.
ஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.