Day: May 23, 2017

சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட்

நடிகர்கள் சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் ஒன்றை நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கு எதிரான கண்டன கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக குற்றஞ்சட்டப்பட்டது. தொடர்ந்து, அந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அவ்வாறு உதகையை …

சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் Read More »

Share

மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 59 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராந்தெயின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை பிரிட்டன் நேரம் 22.35க்கு இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக போலீசார் கருதும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது மனம் …

மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்வு Read More »

Share

மான்செஸ்டரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : அரியானா கிராந்தெ கலை நிகழ்ச்சியில் குண்டுவெடித்து 19 பேர் மரணம்; 50 பேர் காயம்

பிரிட்டனில் மான்செஸ்டர் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரியானா கிராந்தெயின் கலை நிகழ்ச்சியில் தற்கொலைத் தீவிரவாதியால் குண்டுவெடித்து 19 பேர் மரணமும் 50 பேர் காயமும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டர் போலீஸார் இதனை பயங்கரவாத தாக்குதல் என விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.

Share
Scroll to Top