ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றது.
ஐ.பி.எல். கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி ஐதராபாத் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் – ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதிகபட்சமாக புனே அணியின் கேப்டன் ஸ்மித் 51 ரன்கள் எடுத்தார். மும்பை அணியின் ஜான்சன் 3 விக்கெட்டுகளைவும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.